நீரிழிவு பாதப்புண்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்? எங்கு சிகிச்சை அளிக்கலாம்? எவ்வாறு பாதங்களை பாதுகாக்கலாம்?
How to treat diabetic foot ulcer ?

நீரிழிவு பாதப்புண்:
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதப்புண்கள் அறிகுறியோ வலியோ இல்லாமல் உண்டாகி மிகுந்த சிரமத்தை கொடுப்பதால், இதைப்பற்றிய விழிப்புணர்வும், இந்த நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்? எங்கு சிகிச்சை அளிக்க வேண்டும்? இதற்கான சிறப்பு மருத்துவர்கள் எங்கு உள்ளனர்? போன்ற தகவல்களை அறிந்து சரியான சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பாதப்புண் எதனால் வருகிறது?
நீரிழிவு நோயால் பாதங்களில் நரம்புகளும், ரத்தக்குழாய்களும் சேதமடைகின்றன. இதனால் பாதங்கள் உணர்ச்சியற்று இருப்பதால் சின்ன காயங்களும், வலிகளும் புண்கள் பெரிதாகி, மோசமாகும் வரை தெரிவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும் புண்கள் குணமாவது தாமதமாகிறது.
சிகிச்சைமுறைகள் :
கீழ்கண்ட சிகிச்சை முறைகள், பாதங்கள் மேற்கொண்டு சேதமடையாமல் காத்து விரைவில் குணமடைய உதவுகிறது.
புண்ணான பகுதியில் இறந்த திசு நீக்கம்(Debridement):<>
இந்த அறுவை சிகிச்சை முறையில் மதமதப்பு ஊசி அல்லது மயக்க ஊசி இடுப்பில் கொடுத்து வலி இல்லாமல் புண்ணை சுற்றியுள்ள உயிரற்ற தோல் மற்றும் சதைப்பகுதிகள் நீக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்படுகிறது. பின்பு வேறு ஏதாவது பொருட்கள் காயத்தில் சிக்கி உள்ளதா என்பதைக் கண்டறிந்து நீக்கப்படுகிறது. (எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் ஏதேனும் கம்பி,குச்சி உலோக துகள்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.)
இந்த சிகிச்சை முறை மேற்கொண்டு தொற்று ஏற்படாமல் தடுத்து புண் விரைவில் குணமாக உதவுகிறது.இந்த வகை சிகிச்சை மூலம் விரல் பகுதி அழுகி இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்றி பாதங்களைக் காக்க முடியும். சரியான பாத நிபுணரை அணுகி இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டால் பெருமளவு பாதிப்புகளின்றி பாதங்களை காப்பாற்றலாம்.
பாத அழுத்தத்தை குறைத்தல் (offload): பாதத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் இந்தப் பாத அழுத்தம் பாதப்புண் விரைவில் குணமடைவதைத் தடுக்கிறது. எனவே உங்கள் பாத நோய் நிபுணர் அழுத்தத்தை குறைக்கும் காலணிகள் அணிய அறிவுறுத்துவார்.
மேலும் அத்தியாவசியமான வேலைகளை செய்வதற்கு உதவும் வகையில் வாக்கர் (நடைவண்டி மாதிரி) அல்லது சர்க்கர நாற்காலியை பரிந்துரைப்பார்.
இந்த வகையான சாதனங்கள் மூலம் புண் மேல் அழுத்தம் உண்டாவதை குறைத்து, புண் தரையில் படாத வண்ணம் டிரெஸ்ஸிங் (கட்டு) போட்டு விரைவில் குணமடைய உதவுகிறது.
பாத பராமரிப்பு மற்றும் மருந்து கட்டுதல்:
● பாத நோய் நிபுணர் கூறும் அறிவுரைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
● ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும். இது நோய் தொற்றிலிருந்து காக்கவும் புண்கள் விரைவில் குணமடையவும் வழிவகுக்கும்.
● அடிக்கடி காயத்தை சுத்தம் செய்து கட்டு போட வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கட்டு மாற்ற வேண்டும் என்பதை பாத சிகிச்சை நிபுணர் அறிவுரை கேட்டு செய்ய வேண்டும்.
● பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
● பாத நிபுணர் அறிவுறுத்தும் வரை வெறும் கால்களில் நடப்பதை தவிர்க்கவும்.
● உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
● புகைப்பிடித்தல் இருப்பின் அதை நிறுத்தி விடுவது மிகவும் முக்கியம்.
● கட்டு போட்ட பின் கழிப்பறை செல்லும் போது அந்த கட்டு நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள்(antibiotics):
பாத புண்களில் நோய்த்தொற்று இருந்தால் மருத்துவர் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை பரிந்துரைப்பார். தொற்றின் அளவைப் பொறுத்து மாத்திரைகள் எடுக்கும் காலம் மாறுபடும். நோய் தொற்று தசை மற்றும் எலும்புகளுக்கு பரவியிருந்தால் சில நேரங்களில் நேரடியாக இரத்தக்குழாய் (IV injection)மூலம் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் செலுத்த பரிந்துரைக்கப்படும்.
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்:
பாதத்தில் புண் ஏற்படுவதற்கு முன்பே ஒரு முறையாவது பாத நிபுணரை அணுகி பாதத்தின் நிலையை அறிந்து கொள்வது பெருமளவுக்கு பாதிப்புகளைத் தவிர்க்கும். ஏனெனில் பாத நிபுணர் சில கருவிகள் மூலம் பாதத்தின் உணர்வு மற்றும் இரத்த ஓட்டத்தை பரிசோதிப்பார். ஏதேனும் குறைபாடு இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் அறிவுரை வழங்குவார்.
கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பாத நிபுணரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
● பாதம் சிவந்து இருத்தல்
● சூடாக இருத்தல்
● பாதம் வீங்கி இருத்தல்
● புண்களில் இருந்து திரவம் வெளியேறுதல்,
● சலம் வருதல்,
● புண்களில் இருந்து துர்நாற்றம் வருதல்,
● காய்ச்சல் அல்லது குளிர்
● அதிகப்படியான வலி
● பாதப்புண்களைசுற்றியுள்ள சதைப்பகுதி கடினமாக இருத்தல்
புண் கருப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து இருந்தால் உடனே மருத்துவரை அழைக்கவும்.
மதுரை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையம்:
எங்கள் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளின் பாத பிரச்சினைகளான நரம்பு பாதிப்பு முதல் கால் ஆணி மற்றும் ஆறாத புண் வரை பலதரப்பட்ட பாதப் பராமரிப்பு முறைகளை செய்து வருகிறோம். திரும்பத் திரும்ப பாத புண்கள் வராமல் தடுப்பதும், இதனால் ஏற்படும் உறுப்பு இழப்புகளை தவிர்ப்பதுமே எங்கள் மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். எங்கள் பாத நோய் நிபுணர்கள் உங்களை பரிசோதித்து சரியான சிகிச்சை வழங்கி உங்கள் பாதங்களை பாதுகாப்பதற்கான சரியான ஆலோசனையும் வழங்குவர்.
மேலும் விபரங்களுக்கு
எங்கள் முகவரி:
மதுரை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையம்
கேகே நகர்,
மதுரை,
தமிழ்நாடு.
Phone: 0452-2589258
Mobile:8903701714

Leave a Reply