நீரிழிவு நோய் மற்றும் பாதம் இரண்டுக்கும் சிக்கலான உறவு உள்ளது. இந்த நோய் உங்கள் பாதத்தின் ஆரோக்கியத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு அர்த்தம் என்னவெனில், நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்கள் குறித்து அதிக கவனமாக இருக்க வேண்டும். மேலும், பிரச்னைகள் பெரிதாவதற்குள், ஆரம்ப நிலையிலேயே அவற்றை கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஒவ்வொருவரும் தங்கள் பாதங்களை சுயபரிசோதனை செய்து அல்சர் (புண்),கால் ஆணி, மருக்கள் ( warts),வெடிப்புகள், விரல்களுக்கு இடையே பூஞ்சை இவை ஏதேனும் உள்ளனவா என்று தினமும் பார்க்க வேண்டும்.
பாதத்தில் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கண்டறிவதற்காக தேவைப்படின் பாத சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
நாம் நடந்து செல்வதற்கு பாதங்களே பயன்படுத்தப்படுவதால், உடலில் காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள் உறுப்பு நமது பாதங்களே.
சில நேரங்களில், காயம் இருப்பது கூட நமக்கு தெரியாது. நாம் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம். ஆனால், எதிர்காலத்தில் அது பெரிய தொற்றாகி நம்மை அச்சுறுத்தும் அளவு உயர்ந்திருக்கும். குறிப்பாக நீரிழிவு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், பாதத்தில் ஏற்படும் காயங்களை அறியமாட்டார்கள்.
எனவே தான் காலை எழுந்தவுடன் பாதத்தை சோதிப்பது மிக அவசியமாகிறது.
நான் எனது பாதத்தை எவ்வாறு பாதுகாப்பது?
நான் எனது பாதங்களை தினமும் தண்ணீரில் கழுவுவேன். பின்னர் நன்றாக துடைத்து சுத்தம் செய்வேன்.
எனது கால்களை நன்றாக துடைத்து காய வைத்த பின்னர், மாய்சரைசர் கிரீமை முழங்கால் முதல் அடிநாதம் வரை தடவுவேன்.(விரல்களுக்கு இடையே மட்டும் வேண்டாம்).
அது நாள் முழுவதும் கால்களில் ஈரப்பதத்தை நிலைத்திருக்கச் செய்யும். (கால்களுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும்.)
பாதங்களில் சிறிய காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு எப்போதும் காலுறைகள் (socks) அணிவது மிக முக்கியமான ஒன்று. சரியாக பொருந்தக்கூடிய பாதணிகள் (chappals) அணிவது நமக்கு சிறந்தது.
உங்கள் பாதத்தை முழுமையாக கவனமாக பாருங்கள். உங்களுக்கு கண் பார்வை குறைபாடு அல்லது நீங்கள் பருமனான உடல்வாகு கொண்டவராக இருந்தால், உங்களால், கால்களை முழுமையாக பார்க்க முடியவில்லையென்றால், உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உதவியை தேடிப்பெறுங்கள்.
v தோலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது வறண்டு காணப்படுகிறதா என்பதை கவனியுங்கள்.
v கீறல்கள், கொப்புளங்கள், பிளவுகள் அல்லது புண் உள்ளதா என்று பாருங்கள்.
v சரியாக வளராத நகங்கள்,தோல் எங்கேயும் காய்த்துப்போய் உள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக பாத சிறப்பு நிபுணர்களை உடனடியாக பாருங்கள்.
எங்களிடம் முன்பதிவு செய்துகொள்ள, +917395804082/04522589258 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுங்கள்.

Leave a Reply