Home » Uncategorized » வேண்டும் ஏறுபோல் பீடு நடை!

வேண்டும் ஏறுபோல் பீடு நடை!


நமது உடல் உறுதியாக நிற்க உதவும் அடிப்படை ஆதாரமாக இருப்பது பாதங்கள். இந்தப் பாதங்களுக்கு கை,தோல் மற்றும் கூந்தலுக்கு எப்படி சுகாதார ரீதியாக முக்கியத்துவம் தருகிறோமா அதே போல் கவனம் தருவது அவசியமான ஒன்றாகும்.மனிதர்களின் வாழ்க்கையில் அனைத்து இயக்கத்திற்கும் அடித்தளமாக அமைவது நடை.

(திருக்குறள்)
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

தெளிவுரை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏறுபோல் பீடு நடை இல்லை என்றாலும் அவர்கள் சாதாரணமான முறையிலாவது நடக்க வேண்டும்.எனவே தினமும் அனைவரும் பாதத்தை பராமரிப்பு செய்து வருவது முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இல்லை என்றால் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களை இது பாதிக்கலாம்.இதனால் தினசரி வேலைகள்,நடைபயிற்சி, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பல விஷயங்களில் மற்றவரின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே இதனை உணர்ந்து பாத பராமரிப்பை நீங்கள் தினமும் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான தினசரி பாத பராமரிப்பு குறிப்புகள்

தினசரி பாத பராமரிப்பு பற்றிய சில குறிப்புகள்:

  1. ஒவ்வொரு நாளும் பாதங்களை சரியாக சாதாரண நீரில் கழுவி உலர்த்த வேண்டும்.
  2. பாதத்தை கழுவும் போது மிதமான சோப்பினை பயன்படுத்தி கால் விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை நன்கு தேய்த்துக் கழுவுவது நல்லது. குளிக்கும் போது தண்ணீரில் அதிகப்படியான சூடு இருந்து விடக்கூடாது.சூட்டின் அளவை நம் முட்டிக்கையைக் கொண்டு அளந்து பார்க்க வேண்டும்.விரல்கள் மூலம் ஓட்டிப் பார்க்க கூடாது.ஏனெனில் கை விரல்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பால் உணர்வு இழந்து காணப்படும். இதன் மூலம் சூட்டினால் ஏற்படும் கொப்புளங்கள் வருவதை தவிர்க்கலாம்.மேலும் கோயில்களுக்கு செல்லும் போது புரகாரம் சுத்தி வருதல் என்ற கலாச்சாரம் நம் மக்களிடையே தொன்றுதொட்டு உள்ளது.அவ்வாறு சுத்தி வரும் போது சில சமயங்களில் நண்பகலில் பாதங்களில் வெப்பத்தால் கொப்புளங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.அதனால் அதிகாலையிலேயே சென்று வழிபடுவது உத்தமம்.
  3. இப்படி செய்வதன் மூலம் பாதங்கள் நம் மேற்பார்வைக்கு தினமும் வரும்..மாற்றங்கள் உடனுக்குடன் நமக்கு தெரியவரும்.வெட்டுகள் அல்லது காயங்கள் வீக்கங்கள் மற்றும் ஏதேனும் தொற்று உள்ளதா? என்பதை தினமும் நாம் தெரிந்து கொள்ளவும் சரி செய்து கொள்ளவும் முடியும்.
  4. உடலுக்கு பூசப்படும் லோசன்,மாய்ஸ்சரைசர், கிரீம்கள் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவற்றைப் பயன்படுத்தி கால் மற்றும் அனைத்து பாதப்பகுதியையும் (விரல்களுக்கு இடையே மட்டும் தடவ வேண்டாம்) தேய்ப்பதன் மூலம் தோல் வறட்சி மற்றும் அதனால் ஏற்படும் தோல் அரிப்பு குறையும். தோலை அரிப்பினால் நாம் சொரியும் போது அதனால் புண் உண்டாகி அவற்றில் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
  5. இறுக்கமான காலணிகளைப் பயன்படுத்தாமல் உள்ளேயும் வெளியேயும் வேறு வேறு காலணிகளை தினமும் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.பூச்சி, எறும்புகள் இவைகள் பாதணிகள் உளளே அண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  6. கால் விரல்களில் உள்ள நகங்களை நேராக வெட்ட வேண்டும்.வளைந்திருக்கும் நகங்களை பக்கவாட்டில் வெட்டும் போது நேர்த்தியான முறையில் நல்ல நக வெட்டி கொண்டு சிறு நகப்பகுதியை விட்டு விட்டு வெட்டவேண்டும் .பாதத்தில் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்.கடினமாக இருக்கும் பட்சத்தில் நோயாளிகள் தாங்களாகவே வெட்ட முயற்சி செய்யாமல் பாத சிறப்பு மருத்துவமனையின் உதவியை நாடலாம்.நகத்தில் நிற மாற்றம் இருந்தால் அந்த நகங்களில் நெயில் பாலிஷ் அடிக்க கூடாது.நிறமாற்றம் நகங்களில் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.பல சமயங்களில் நகம் நிற மாற்றம் பிரச்சினையாக இருக்காது.

மேலும் விவரங்கள் மற்றும் தகவலுக்கு மதுரை கால் பராமரிப்பு மையத்தை நாடலாம்.

அங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் உங்களுக்கு தேவையான அனைத்து பாதம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

Medically Reviewed by Dr. G. Saravanakumar

Leave a Reply

Discover more from Madurai Footcare Centre

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading